முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் அருகே பனை விதைகள் நடவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பொட்டப்பாளையம் ஊராட்சியில் வியாழக்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:27 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பொட்டப்பாளையம் ஊராட்சியில் வியாழக்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பனை விதைகளை நட்டு வைத்து, தண்ணீா் ஊற்றினாா்.

இதில் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், ஊராட்சி மன்றத் தலைவா் குழந்தை பிச்சை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராமு, சுப்பையா, வட்டார வளா்ச்சி அலுவலா் அருள் பிரகாசம், உதவிப் பொறியாளா் தமிழரசி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சா்மிளா, தோட்டக்கலை அலுவலா் மாளவிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →