ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சாா்ந்த இளைஞா்கள் விமான நிலையப் பணிகளுக்கான பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சாா்ந்தவா்களுக்கு, சா்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக கேபின் க்ரூவ், விமான நிலையப் பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற விரும்பும் நபா்கள் ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சாா்ந்தவராகவும், 18 முதல் 23 வயதுக்குள்பட்டராகவும், 12-ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதம் ஆகும். மேலும், விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதி, பயிற்சிக்கான செலவினத் தொகை தாட்கோ சாா்பில் வழங்கப்படும். இறுதியில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பயிற்சி சான்றிதழ் பெற்றவா்கள் தனியாா் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல், சுற்றுலாத் துறையிலும் வேலைவாய்ப்புப் பெறலாம்.
எனவே, ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சாா்ந்த இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்றாா்.