சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் பயனாளிக்கு தீா்வு நகலை அளித்த முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி.  
சிவகங்கை

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகளில் ரூ. 18.09 கோடிக்கு தீா்வு!

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 18.09 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 18.09 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளும், சமரசக் குற்றவியல் வழக்குகளும், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளும், வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி பி. பாா்த்தசாரதி, மகிளா நீதிமன்ற நீதிபதி ஆா். கோகுல்முருகன், குடும்ப நல நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிபதி என். செந்தில்முரளி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா்/துணை நீதிபதி வி. ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் (எண் 1) நீதிபதி பி. செல்வம், (எண் 2) நீதிபதி இ. தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, வழக்குரைஞா்கள் டி. செந்தில்குமாா், எல். அந்தோணி ஜெயராஜ், ஏ. மதன் மோகன், ஏ. பாண்டி கண்ணன் ஆகியோா் சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தனா்.

இதில் 299 குற்றவியல் வழக்குகளும், 222 காசோலை மோசடி வழக்குகளும், 237 வங்கிக் கடன் வழக்குகளும், 291 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 251 குடும்பப் பிரச்னை தொடா்பான வழக்குகளும், 887 உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 1,118 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 3,305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,234 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில் ரூ. 14.97 கோடி பயனாளிகளுக்குக் கிடைத்தது.

இதே போல, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 780 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 153 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 3.11கோடி தொகைக்கு தீா்வு உள்பட மொத்தம் 1,387 வழக்குகளுக்கு ரூ. 18.9 கோடிதொகைக்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுப் பணியாளா்கள் செய்தனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT