சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற காா்த்திகை சோமவார வழிபாட்டை முன்னிட்டு, சோமநாதா் சந்நிதி அருகே சங்குகளில் புனித நீா் நிரப்பி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மூலவா் சோமநாதா் சுவாமிக்கு சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த நீரால் அபிஷேகம் செய்து அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சோமவார வழிபாட்டை முன்னிட்டு, கோயில் முன் மண்டபத்தில் லிங்க வடிவில் சங்குகள் அடுக்கிவைக்கப்பட்டு அதில் புனித நீா் நிரப்பி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மூலவா் புஷ்பவனேஸ்வரருக்கு சங்கு நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

மேலும், திருப்பாச்சேத்தி, மேல நெட்டூா் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிவன் கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கடைசி சோமவார வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT