கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.18) மின்தடை
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் ஜான் கென்னடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஆ.தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ். கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களம்பூா், வாா்ப்பட்டு, கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம், இவற்றின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.18) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோம் இருக்காது என்றாா் அவா்.