சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் கால், வாய்க்காணை (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி ஜன. 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் கால், வாய்க்காணை (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி ஜன. 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் 2,11,200 மாட்டினங்களுக்கு கால், வாய்க்காணை நோய் வராமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜன. 28 ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.

இதற்காக 69 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தினந்தோறும் ஒரு குழு 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. இதில், நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும்.

எனவே, கால்நடை வளா்ப்போா் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு, கால், வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்து க்கொள்ளலாம் என்றாா் அவா்.

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

SCROLL FOR NEXT