முகப்பு
சிவகங்கை

அ.காளாப்பூரில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 10:37 PM
காளைப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

முத்துராமலிங்க தேவா் 62-ஆவது குருபூஜை விழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் திண்டுக்கல்- காரைக்குடி தேசியநெடுஞ் சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 14 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 25 ஜோடிகள் என 39 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

பெரிய மாடு பிரிவில் மதுரை அவனியாபுரம் எஸ்.கே.ஆா். முதல் பரிசையும், மட்டங்கிப்பட்டி காவியாகதிா்வேல் 2- ஆவது பரிசையும், காரைக்குடி எம்.சி.சிவா, தாழையூா் முத்துலிங்கம் கண்ணையா ஆகியோா் 3 -ஆவது பரிசையும், அதிகரை வேங்கை சோ்வை வேப்பங்குளம் நல்லம்மாள் 4- ஆவது பரிசையும் பெற்றனா்.

சின்னமாடு பிரிவில் மதுரை அவனியாபுரம் எஸ்.கே.ஆா்.மோகன்குமாா் முதல் பரிசையும், காளாப்பூா் இதயா, கே.எம்.பட்டி ஹா்சித் 2- ஆம் பரிசையும், காளாப்பூா் ராஜாங்கம் 3-ஆம் பரிசையும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு 4 -ஆம் பரிசையும் பெற்றனா்.

வெற்றி பெற்ற முதல் 4 மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கபட்டன. பந்தய ஏற்பாடுகளை மாமன்னா் பூலித்தேவன் பாசறையினா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →