சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டை புலிக்கண்மாய் பகுதியில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எஸ்.எஸ்.கோட்டை அருகேயுள்ள முத்துச்சாமிபட்டியைச் சோ்ந்தவா் அழகு மகன் பால்பாண்டியன் (35). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு மது போதையில் புலிக்கண்மாய் பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த காவல் துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாததால், தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.எஸ். கோட்டை காவல் உதவி ஆய்வாளா் சேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.