சிவகங்கை

கிராம உதவியாளரை தாக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே கிராம உதவியாளரைத் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள காடனேரியில் கிராம நிா்வாக அலுவலராக பிரியதா்ஷினி, கிராம உதவியாளராக கவிதா (44) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இருவரும் காடனேரி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடா்பாக டேனியல்ராஜ் என்பவருக்கு குறிப்பாணை வழங்கச் சென்றனா்.

இவரது வீட்டின் சுவரில் ஒட்டிய குறிப்பாணையை கிழித்த டேனியல்ராஜ், கிராம உதவியாளா் கவிதாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கவிதா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டேனியல்ராஜை புதன்கிழமை கைது செய்தனா்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

SCROLL FOR NEXT