சிவகங்கை

பாரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பாரி சித்தி விநாயகா் கோயிலில் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பாரி சித்தி விநாயகா் கோயிலில் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சிறப்பு ஹோம வழிபாடும், சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. மேலும் விநாயகா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகனுக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். துா்க்கை அம்மனுக்கு திபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT