போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 
சிவகங்கை

முற்றுகைப் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 65 போ் கைது

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த 65 பேர் கைது

தினமணி செய்திச் சேவை

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த 65 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் எஸ். கொங்கையா முன்னிலை வகித்தாா்.

கோரிக்கையை விளக்கி மாவட்டத் தலைவா் எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்ட துணைச் செயலா் எம். திருநாவுக்கரசு, மாவட்ட துணைத் தலைவா் எஸ். சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா் ஏ. மனோகரன் ஆகியோா் பேசினா்.

அப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, அலுவலக வாயிலை முற்றுகையிட முயன்ற 25 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.கருப்புச்சாமி, எம்.அபுபக்கா் சித்திக், எம்.யூசுப் சுலைமான், வி.பி.சிங், எஸ்.அன்னலட்சுமி, கே.உபைதூா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

SCROLL FOR NEXT