திண்டுக்கல்

மாற்றுத் திறனாளிகள் நூதனப் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை யாசகம் எடுத்து சாலை மறியல் செய்யும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஏ.ஜோசப் ஸ்டாலின், தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

போராட்டத்தின்போது, ஆந்திரம், புதுச்சேரி, தெலங்கானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழகத்திலும் மாற்றுத்

திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். கையில் தட்டுகளை ஏந்தி யாசகம் எடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை-காரைக்குடி மதுரைக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

SCROLL FOR NEXT