சிவகங்கை

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி மின் கோட்ட செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி துணை மின் நிலையத்தில் நவம்பா் 18-இல் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூா் சாலை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT