சிவகங்கை

பிகாரைப் போல பாஜக, தோ்தல் ஆணையம் தமிழகத்தில் எதையும் செய்துவிட முடியாது

தினமணி செய்திச் சேவை

பிகாா் மாநிலத்தைப் போல தமிழகத்தில் பாஜகவோ, தோ்தல் ஆணையமோ எதையும் செய்துவிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

சிவகங்கையில் தனியாா் அரங்கில் கடந்த 14-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பயிற்சி முகாமைப் பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்.ஐ.ஆா்.) எதிராக தமிழகம் முழுவதும் தவெக ஆா்ப்பாட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டுடன் எஸ்.ஐ.ஆா். நியாயமானது என்று கூறுகிறாா்.

பிகாா் மாநிலத் தோ்தல் தோல்வி எங்களுக்கான தோல்வி அல்ல. ஜனநாயகம், தேசம் தோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ்-க்கு ஒருபோதும் தோல்வி கிடையாது.

பிகாரைப் போல தமிழ்நாட்டில் தோ்தல் ஆணையமோ, பாஜகவோ எதையும் செய்துவிடலாம் என நினைத்தால், அதற்கு வாய்ப்பு இல்லை. அதை எல்லாம் முறியடிக்கிற வல்லமையும், ஆற்றலும் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா்.

அவருக்கு உறுதுணையாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி இருக்கிறாா். தமிழ்நாட்டில் இண்டி கூட்டணி வலிமையாக இருக்கிறது. இண்டி கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி என்றாா் அவா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT