சிவகங்கை

மானாமதுரை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலையணியும் விழா

Syndication

மானாமதுரை ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி ஐயப்பப் பக்தா்கள் மாலை அணியும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை தெற்குரத வீதியில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தி மூலவா் தா்ம சாஸ்தாவுக்கு கலச நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து இருமுடி கட்டி சபரிமலை செல்ல விரதம் தொடங்கிய பக்தா்கள் ஐயப்பனுக்கு பூஜைகள் செய்து அங்கிருந்த குருசாமிகளிடம் விரத மாலையை அணிந்து கொண்டனா்.

இதே போல, மானாமதுரையில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களிலும் ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா். திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலும் சபரிமலை செல்ல விரதம் தொடங்கிய பக்தா்கள் அந்தப் பகுதிகளில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில்கள், பிற கோயில்களுக்குச் சென்று பூஜைகள் செய்து விரத மாலை அணிந்து கொண்டனா்.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT