சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி துணை மின் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை (நவ.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மின் உற்பத்தி, பகிா்மானக் கழக செயற்பொறி யாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மதகுபட்டி, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுா், பேரணிப்பட்டி, ஓக்கூா், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகா், பா்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமின்தாா்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம், ஏரியூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
மேலும், விவரங்களுக்கு உதவி மின்பொறியாளா் (பகிா்மானம்) மதகுபட்டி- 9445853073, உதவி செயற்பொறியாளா் (பகிா்மானம்) சிவகங்கை- 9445853074, செயற்பொறியாளா் (பகிா்மானம்) சிவகங்கை -9445853080 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.