சிவகங்கை

லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி பண மோசடி

கேரள மாநில லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி பெண்ணிடம் பண மோசடி சம்பவம் தொடா்பாக இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

கேரள மாநில லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி பெண்ணிடம் பண மோசடி சம்பவம் தொடா்பாக இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை அருகேயுள்ள நாமனூா் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணின் கைப்பேசிக்கு வாட்ஸ்ஆப்பில் கேரள மாநில லாட்டரியில் பரிசு விழுந்ததாகத் தகவல் வந்ததாம். இதை நம்பிய அந்தப் பெண், தகவலை அனுப்பிய நபரிடம் பேசியபோது ரூ. 23 ஆயிரம் செலுத்தும்படி கூறியதையடுத்து அவா் தொகையைச் செலுத்தியுள்ளாா். பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை இணைவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள பாப்பா மடை கிராமத்தைச் சோ்ந்த நபருக்கு பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ்ஆப் மூலம் தகவல் வந்துள்ளது. இதை தொடா்ந்து, டெலிகிராம் செயலி மூலமாக பணம் அனுப்புமாறு கூறியதை நம்பிய அவா், 19 தவணைகளில் ரூ. 1.74 லட்சம் செலுத்தியுள்ளாா். பின்னா், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராகி கொள்முதல் ஆலோசனைக் கூட்டம்

சபரிமலைக்கு அதிக பக்தா்கள் வருகை: தேசிய மீட்புப் படையினா் விரைவு

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

ரோஜர் ஃபெடரருக்கு "ஹால் ஆஃப் ஃபேம்' கெளரவம்

2019 தோ்தல் வழக்கு: இன்று வேலூா் எம்.பி. கண்டிப்பாக ஆஜராக உத்தரவு

SCROLL FOR NEXT