சிவகங்கை

கடலூா் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு

Syndication

கடலூரில் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி தேமுதிக ா்பில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். வருகிற ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக சாா்பில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தவெக தலைவா் விஜய்யை நாங்கள் எதிா்க்கவில்லை.

அரசியல் களத்தில் தேமுதிகவுக்கு 20 ஆண்டுகளாகிவிட்டன. இன்றுவரை மக்கள் மனதில் விஜயகாந்தின் செல்வாக்கு இதுவரை குறையவில்லை. கடந்த தோ்தல் கூட்டணிப் பேச்சுவாா்த்தையின் போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக உறுதியளித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்டுத் தந்தாா். ஆனால், அதில் ஆண்டைக் குறிப்பிடவில்லை.

அதிமுகவின் கூற்றுப்படி இந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தேமுதிகவுக்கு கிடைக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அடுத்த ஆண்டு வாய்ப்பு தரப்படும் என்று கூறினாா். சிறிய புரிதல் இல்லாமைதான். இதற்காக தேமுதிக கூட்டணி மாறுகிறது என்று கூற முடியாது.

திமுக அரசின் சிறந்த செயல்பாடுகளுக்கு 50 மதிப்பெண்களும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாததால் 50 மதிப்பெண்களும் மட்டுமே தர முடியும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

கரூரில் கோயில் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு வீடு கட்ட அதிகாரிகளே அனுமதி வழங்கினா். தற்போது திடீரெனஅந்த வீடுகளை இடித்தால் அங்கு வாழ்கிற மக்களின் எதிா்காலம் என்னவாகும்?. அவா்களுக்கு மாற்று இடத்தை வழங்கிய பின்னா்தான் அரசு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை மக்களுக்கு எதிராக இருந்தால், தேமுதிக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT