FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம்!

மதுரை என்டிஏ மாநாட்டு முகப்பில் பெரியாரின் படம் இடம்பெற்றுள்ளது பற்றி....

Updated On : 28 பிப்ரவரி 2026, 1:46 pm IST
மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம்...
பகிர்:

மதுரையில் நாளை(மார்ச் 1) நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டின் நுழைவாயிலின் முகப்பில் பெரியார், அண்ணா படங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்ளவும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி இன்று(பிப். 28) இரவு சென்னை வரவுள்ளார்.

நாளை(மார்ச் 1) காலை புதுச்சேரி செல்லும் அவர், மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் அவர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இதன்பின்னர் மதுரையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள என்டிஏ மாநாட்டில் பங்கேற்கிறார்.

Advertisement

Advertisement

என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டுக்கான நுழைவாயில் முகப்பில் பெரியார் மற்றும் அண்ணாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

summary

Periyar's photo in National Democratic Alliance conference at Madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments