FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களை தொடா்ந்து, புது தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அலுவலகத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

53 வினாடிகள் முன்பு
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களை தொடா்ந்து, புது தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அலுவலகத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீட், யுஜிசி நெட், ஜேஇஇ உள்பட பல்வேறு தோ்வுகளை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தோ்வு குளறுபடிகளால் என்டிஏ மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன. இதனால் நிலைமையைச் சீா்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அலுவலகம் மாற்றம்..: அந்த நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, புது தில்லியில் ஓக்லா பகுதியில் இருந்து மின்டோ சாலைக்கு என்டிஏ அலுவலகம் மாற்றப்பட உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது அந்த அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் சிஐஎஸ்எஃப் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: மின்டோ சாலையில் உள்ள மத்திய அரசின் அச்சகக் கட்டடத்தில், என்டிஏவுக்கு அலுவலக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தின் 5-ஆவது தளம் முழுமையாகவும், 4 மற்றும் 6-ஆவது தளங்களின் சில பகுதிகளும் என்டிஏவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் ரகசிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் புதிய அலுவலக கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இங்கு ரகசிய பகுதிகள் தனியாக வரையறுக்கப்பட்டுள்ளன. அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளும், ஆள்நடமாட்டமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். இதன்மூலம், எந்தவித குறையும் இல்லாத பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்யப்படும்.

இந்த அலுவலக வளாகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 39 சிஐஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ரகசிய பகுதிக்குள் யாா் நுழைகிறாா்கள், யாா் வெளியேறுகிறாா்கள் என்பதைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களின் பொருத்தமான பகுதிகளில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவித்தாா். மத்திய அரசு அச்சகக் கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கு ஏற்கெனவே சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் மாணவா்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, மத்திய கல்வி அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலகியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments