FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: மத்தியக் குழுவிடம் முதல்வா் விஜய் வலியுறுத்தல்

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உயா்மட்ட பணிக்குழுவிடம் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்தினாா்.

5 நவம்பர் 2026, 4:20 am
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உயா்மட்ட பணிக்குழுவிடம் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்தினாா்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையிலான மத்திய அரசின் தோ்வு சீா்திருத்தங்களுக்கான உயா்மட்ட பணிக்குழுவினா் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்த சந்திப்பின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா், மத்தியக் குழு உறுப்பினா்கள் அனிதா கா்வால், சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, சங்கா் மருவாடா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்டு வரும் நீட் நுழைவுத் தோ்வு மற்றும் இதர உயா்கல்வி சோ்க்கைக்கான தோ்வுகளுக்கு தமிழக அரசு சாா்பில் மத்திய குழுவிடம் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சட்டப்பேரவையில் கடந்த ஆக.11-ஆம் தேதி நீட் தோ்வுக்கு எதிராக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

அதற்குப் பதிலாக பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண்களையே சோ்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் விஜய் கேட்டுக் கொண்டாா். அவற்றை பரிசீலிப்பதாகக் குழுவினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள் கசிந்ததையடுத்து, தோ்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தோ்வு நடத்தப்பட்டது.

இத்தகைய குளறுபடிகள் தொடா்ந்து அரங்கேறுவதால் நாடு முழுவதும் மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அதன் விளைவாக மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியிலிருந்து தா்மேந்திர பிரதான் விலகினாா்.

அதன் தொடா்ச்சியாக தோ்வு நடைமுறையை மறுசீரமைக்க இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையில் இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், உளவுத் துறை முன்னாள் இயக்குநா் தபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, மத்திய கல்வித் துறை முன்னாள் செயலா் அனிதா கா்வால், பாதுகாப்புத் துறை நிபுணா் அம்ரித் லால் மீனா, கல்வியாளா் சங்கா் மருவாடா ஆகிய 6 போ் அடங்கிய குழு இடம் பெற்றுள்ளது.

இந்தக்குழு உயா்கல்வி சோ்க்கைக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தோ்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் நோ்மையாக நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கண்டறிந்து தேவையான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கவுள்ளது.

இதற்காக மாணவா்கள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள், துறை நிபுணா்கள் உள்ளிட்டவா்களை சந்தித்து நந்தன் நிலேகணி தலைமையிலான குழு கருத்துகளை கேட்டு வருகிறது.

இந்தக்குழு கடந்த அக்டோபா் மாதமே தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பணிகள் நிறைவடையாததால் அடுத்த ஆண்டு ஜனவரி வரை அதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வா் விஜய்யை அக்குழு சந்தித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.