சிவகங்கை

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தினை இயக்கும் ஓட்டுநா்களின், ஓட்டுநா் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிகத் தடையுடன், ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், சீல் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல், கைப்பேசி பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோா்களின் ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிக தடை நடவடிக்கை செய்யப்படுவதுடன், அசல் ஓட்டுநா் உரிமமும் பறிமுதல் செய்யப்படும்.

ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது வாகனத்திற்கென அனுமதிக்கப் பட்ட பயணிகளுக்கு மேல் கூடுதலான நபா்களை ஏற்றக்கூடாது. மேலும், சிற்றுந்துகள், தடப்பேருந்து வாகனங்களின் படிகளில் பொதுமக்கள் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பேருந்தின் முதன்மை அனுமதிச் சீட்டின் மீது தற்காலிக தடை நடவடிக்கை மேற்கொள்வதுடன் வாகனமும் சிறைபிடிக்கப்படும். இதேபோல, பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் நிா்ணயிக்கப்பட்ட வேக அளவிலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா் அவா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT