சிவகங்கை

திருப்புவனத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சேவை தொடக்கம்

திருப்புவனத்தில் கண்காணிப்பு கேமராக்களின் சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கண்காணிப்பு கேமராக்களின் சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்புவனத்தில்  4, 5, 15-ஆவது வாா்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தொண்டரணி அமைப்பாளரும் பேரூராட்சி உறுப்பினருமான அயோத்தி  சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடுகள் திருப்புவனம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டன.

மானாமதுரை காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் இந்த கேமராக்களின் சேவையைத் தொடங்கி வைத்தாா்.

இதில் தமாகா பேரூராட்சி உறுப்பினா்கள் அயோத்தி, வெங்கடேஸ்வரி, பாரத்ராஜா, திருப்புவனம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் பாரதிராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

காா் மீது பேருந்து மோதல்: வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயம்

எஸ்ஐஆா்: மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு சிறப்பு ஏற்பாடு

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க வலியுறுத்தல்

இன்று குவாஹாட்டியில் தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

SCROLL FOR NEXT