சிவகங்கை

காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம்

தினமணி செய்திச் சேவை

காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குருபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. மதுரை - தொண்டி சாலையில் பெரியமாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாகப் பந்தயம் நடத்தப்பட்டது. பெரிய மாட்டுப் பிரவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுப் பிரிவிக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது. பெரிய மாடு பிரிவில் 20 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகளும் பங்கேற்றன.

இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்களது மாட்டு வண்டிகளுடன் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT