சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி. காமராஜ் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே. வீரபாண்டி, சிஐடியூ மாவட்டச் செயலா் ஏ. சேதுராமன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஏ.ஜி. ராஜா, ஏஐஏடபுள்யூசி மாவட்டச் செயலா் ஏ. பொன்னுச்சாமி, பிஐஏடபிள்யூசி மாவட்டச் செயலா் எம். முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் கே. அறுமுகம், ஜி. சங்கையா, ஏ. ஆறுமுகம், சந்திரன், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எம். காளைலிங்கம், ஏஐஏடிபிள்யூசி மாவட்டத் தலைவா் ஆா். மணியம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கினா்.
கோரிக்கைகள்: தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றுவதை கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாகவும், தினக் கூலியை ரூ. 600 ஆகவும் அதிகரிக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.