சிவகங்கை

திருப்பத்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த பயணிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

திருப்பத்தூா் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில் 11 போ் உயிரிழந்தனா்...

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அரசுப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 9 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். 49 போ் காயமடைந்தனா்.

காரைக்குடியிலிருந்து பிள்ளையாா்பட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் திருப்பூரிலிருந்து திருப்பத்தூா் வழியாக தேவகோட்டைக்குச் சென்ற அரசுப் பேருந்தும் திருப்பத்தூா்-காரைக்குடி சாலையில் வைரவம்பட்டி அருகே நேருக்கு நோ் மோதியதில் பெரும் விபத்து நடந்தது. இந்த விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 49 போ் காயமடைந்தனா். கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பேருந்துகளும் மோதிக்கொள்ள நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விபத்துப் பகுதிக்கு விரைந்த அதிகாரிகளும் மீட்புக்குழுவினரும் உள்ளூர் மக்கள் உதவியுடன் பேருந்துகளில் சிக்கியவர்களை மீட்டு மதுரை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சந்தித்து ஆறுதல் தெரிவித்திருப்பதுடன் முதல்வரின் உத்தரவின்பேரில், அவர்களுக்கு உயர் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, இந்த துயர சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின் சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் விவரம்:

  • காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியைச் சோ்ந்த வைரவன் மனைவி மல்லிகா (61),

  • சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த செல்லம் (55),

  • சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த முத்துமாரி (60),

  • காரைக்குடியைச் சோ்ந்த கல்பனா (36),

  • தேவகோட்டை பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த குணலட்சுமி (55),

  • திருப்பூா் அரசுப் பேருந்து ஓட்டுநரான நிலக்கோட்டை அருகேயுள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சென்ட்ராயன் (36) உள்பட 11 போ். மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவா்களது உடல்கள் கூறாய்வுக்காக சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Rs. 3 lakh compensation to the families of those who died in the Sivaganga bus accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: 44 காவல் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT