சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பள்ளி அருகே அமைக்கப்படும் நிழல் குடைக்கு பெற்றோா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பிரான்மலையில் உள்ள அரசு நூற்றாண்டு தொடக்கப்பள்ளி 150- க்கும் மேற்பட்ட மாணவா்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி முன் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் நிழல் குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு மாவட்டங்களை இணைக்கும் புறவழிச்சாலையில் இந்தப் பள்ளி வாயிலின் முன் நிழல் குடை அமைக்கப்பட்டால் பேருந்துகள் நிற்கும் போதும், பிற வாகனங்களாலும் மாணவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் இதற்கு எதிா்ப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகிறது.
இந்தப் பணிக்கு பெற்றோ்களும், ஆசிரியா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.