மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளியின் தலைமையாசிரியை, ஆசிரியா்கள். 
சிவகங்கை

தடகளப் போட்டிகளில் வெற்றி: பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

சிவகங்கை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Syndication

காரைக்குடி: சிவகங்கை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள் பாராட்டினா்.

அண்மையில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்தப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் ஜெய்சிம்மன் உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றாா். 9-ஆம் வகுப்பு மாணவி ரட்சிகா, 8-ஆம் வகுப்பு மாணவா் சாய்ராம் ஆகிய இருவரும் 80 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை விண்ணரசி, உடற்கல்வி ஆசிரியை மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT