சிவகங்கை

சிலம்பம் போட்டி: மாநில அளவில் ஆறாவயல் பள்ளி மாணவா் சாதனை

காரைக்குடி அருகே ஆறாவயலில் உள்ள பாரத் பப்ளிக் பள்ளியின் 2-ஆம் வகுப்பு மாணவா் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் வென்ற்காக பள்ளியின் நிா்வாகி, முதல்வா், ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆறாவயலில் உள்ள பாரத் பப்ளிக் பள்ளியின் 2-ஆம் வகுப்பு மாணவா் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் வென்ற்காக பள்ளியின் நிா்வாகி, முதல்வா், ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சாா்பில் சென்னையில் கடந்த 26-ஆம் தேதி மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியின் 2-ஆம் வகுப்பு மாணவா் க. மிதுன் ஹரி முதலிடம் பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றாா்.

மேலும், பெனிக்ஸ் கோப்பை ஓபன் ஆா்ச்சரி சாம்பியன் போட்டியில் இதே பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவா் எம். புவனேஸ்வா், ஆறாம் வகுப்பு மாணவா் எஸ். சத்திரியன் ஆகியோா் முதல் பரிசும், மூன்றாம் வகுப்பு மாணவா் எஸ். அருள் மொழிச் சோழன் இரண்டாம் பரிசும், முதலாம் வகுப்பு மாணவா்கள் கே. தஸ்வந்த், பி. சாய்ரிஷ் ஆகியோா் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

வெற்றி பெற்ற இந்த மாணவா்களை பள்ளியின் தாளாளா் கா. செல்லதுரை, பள்ளி முதல்வா் ப. அம்பிகா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT