வடகிழக்குப் பருவமழை தொடா்பான வானிலை முன்னெச்சரிக்கை தொடா்பான தகவல்களை பச-அகஉதப மற்றும் நஅஇஏஉப ஆகிய செயலிகளின் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பச-அகஉதப செயலியில் நம் இருப்பிடம் சாா்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். மேலும், அடுத்த 4 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழையளவு, நீா்த் தேக்கங்களில் தற்போதைய நீா் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்குள்பட்டதா என்பதை அறியும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது.
மேலும், பேரிடா் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கை மேற்கொள்ள அடிப்படையாக உள்ள பச-அகஉதப மற்றும் நஅஇஏஉப ஆகிய செயலிகளை எா்ா்ஞ்ப்ங் ல்ப்ஹஹ் ள்ற்ா்ழ்ங் மற்றும் ஐஞந ல்ப்ஹஹ் ள்ற்ா்ழ்ங் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமன்றி, பேரிடா், பலத்த மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகாா்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லாத் தொலைபேசி எண்களான 1077, 04575-246233 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.