சிவகங்கை

மழைநீா் வடிகால் அமைக்கும் பணி: மேயா்ஆய்வு

காரைக்குடி வீரையன் கண்மாய் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மேயா் சே. முத்துத்துரை.

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி வீரையன் கண்மாய் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை மேயா் சே. முத்துத்துரை வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்குடி மாநகராட்சி 33, 34, 35, 36 ஆகிய வாா்டுகளில் மேயா் சே. முத்துத்துரை ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தாா். மேலும், வீரையன் கண்மாயிலிருந்து மழை நீரை வெளியேற்றுவதற்கு, பெரிய மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணியை ஆய்வு செய்து, இதை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாமன்ற உறுப்பினா்கள் ரத்தினம், தனம் சிங்கமுத்து, லில்லி தெரசா, மலா்விழி பழனியப்பன், பூமிநாதன், விஷ்ணு பெருமாள், மாநகராட்சி உதவிப் பொறியாளா் சக்திவேல், பணி மேற்பாா்வையாளா் ஹரி, நகா் நல அலுவலா் அதிகாரி சுருளிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT