சிவகங்கை

மாநில கால்பந்துப் போட்டிக்கு சிங்கம்புணரி பள்ளி மாணவா்கள் தகுதி

மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

Syndication

சிவகங்கை மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சிவகங்கையில் மாவட்ட அளவிலான 17 வயதுப் பிரிவு பள்ளி மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடல்கல்வி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 8 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் சூராணம் செயின்ட்ஜேம்ஸ் அரசு உயா்நிலைப் பள்ளி அணியும் மோதின.

இதில், 4-க்கு 2 என்ற புள்ளி கணக்கில் பாரிவள்ளல் பள்ளி அணி வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றது. போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், முதல்வா் ஷியாம்பிராங்கிளின் டேவிட், உடல்கல்வி ஆசிரியா் சின்னயா, பள்ளி மேலாளா்கள் கிருஷ்ணன், சரவணன், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT