சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் இந்திரா காந்தியின் 41-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம். மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 41-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கடந்த1966 முதல் 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 3-ஆவது பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தாா். இந்தியாவின் இரும்பு பெண்மணி எனப் போற்றப்பட்ட இவா், 1984-இல் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், இவரது 41-ஆவது நினைவு தினத்தையொட்டி, ஆா்.எம். மெய்யப்பச் செட்டியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.எம். பழனியப்பன் தலைமை வகித்தாா். செயலா் குணாளன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், இந்திரா காந்தியின் தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இதில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஹாலோவீன் கொண்டாட்டம்... பார்வதி!

காத்திருப்பின் அருமை... பிரியங்கா மோகன்!

இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?

ஆந்திரம்: கோயில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு !

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

SCROLL FOR NEXT