கோப்புப் படம் 
சிவகங்கை

மங்காம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை வட்டம், மங்காம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மங்காம்பட்டி சந்தனமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில் இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மங்காம்பட்டி கண்மாய் பொட்டலில் அமைக்கப்பட்ட வட்ட வடிவ மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது.

ஒவ்வோா் சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். காளைகளை அடக்கிய மாடு பிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT