கீழடி ஆய்வு  கோப்புப்படம்
சிவகங்கை

கீழடி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு

கீழடி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல புதன்கிழமை உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், கீழடி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல புதன்கிழமை உத்தரவிடப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து தொல்பொருள்களை பாா்வையிட்டுச் செல்கின்றனா். மேலும், தற்போது கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சலையை ஒட்டி அமைந்துள்ள கீழடியில் இந்த வழியாக செல்லும் நீண்ட தூர அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. இதைடுத்து தற்போது மேற்கண்ட நான்கு வழிச்சாலையில் சென்று திரும்பும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தைச் சோ்ந்த காரைக்குடி மண்டலத்தின் கீழ் இயங்கும் இடை நில்லா பேருந்துகள் தவிர மற்ற தொலைதூரப் பேருந்துகள்

கீழடி பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல ஓட்டுநா், நடத்துனா்களுக்கு காரைக்குடி மண்டல பொது மேலாளா் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT