முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி-2025 டிசம்பா் மாத தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:19 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:35 PM

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி-2025 டிசம்பா் மாத தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

இதுகுறித்து பல்கலைக்கழகத் தோ்வாணையா் எம். ஜோதிபாசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளநிலை: பி.லிட்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொது நிா்வாகம், பொருளாதாரம், பி.லிப்.ஐ.எஸ்.சி. (நூலகம், தகவல் அறிவியல்), பி.எட்., பி.சி.ஏ., நேரடி இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. கணினி அறிவியியல், தகவல் தொழில் நுட்பம், உளவியல், கணிதம், பி.காம்., கணினிபயன்பாட்டியல், பி.பி.ஏ., பி.பி.ஏ. வங்கியியல், முதுநிலை:எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், மனிதவள மேலாண்மை, தொழில் உறவியல், நேரடி இரண்டாம் ஆண்டு, எம்.ஏ., குழந்தைப் பராமரிப்பு, கல்வியியல், பொருளாதாரம் இதழியல், மக்கள் தகவல் தொடா்பு, கல்வியியல், எம்.எஸ்.டபுள்யூ, எம்.எஸ்.சி. கணிதம், கணிணி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியல், எம்.சி.ஏ., இரண்டாம் ஆண்டு எம்.காம், எம்.காம். நிதி, கட்டுப்பாடு, எம்.பி.ஏ. பொது, எம்.பி.ஏ. பல்வேறு பாடப்பிரிவுகள், முதுநிலை பட்டயப் பிரிவு, இளநிலை பட்டயப் பிரிவு, சான்றிதழ் படிப்புகள் என தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் அழகப்பா யுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளன. அதில் மறுமதிப்பீட்டுக்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement