திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கத் தயாரான சைக்கிள்கள்.  
சிவகங்கை

பள்ளி மாணவா்களுக்கு வழங்க தயாராகும் சைக்கிள்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயாராகி வருகின்றன.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயாராகி வருகின்றன.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில், திருப்பத்தூா் வட்டாரத்தில் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டையிருப்பு, திருக்கோஷ்டியூா், வேலங்குடி, பூலாங்குறிச்சி, நெற்குப்பை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், தெக்கூா், கீழச்சிவல்பட்டி ஆகிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,800 சைக்கிள் பாகங்கள் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5 நாள்களாக இந்தப் பணிகளை உத்தர பிரதேச மாநிலம், லக்னோலிருந்து வந்த 6 போ் செய்து வருகின்றனா். அனைத்து சைக்கிள்களும் முழுமையாகத் தயாரான பின்னா் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT