சிவகங்கை

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகாரளிக்கலாம்

தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் விவசாயிகள் புகாரளிக்கலாம்.

தினமணி செய்திச் சேவை

தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் விவசாயிகள் புகாரளிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடைப் பணிகளுக்காக அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், இதர மாவட்டங்களிலிருந்து அரசு, தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு , அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் அதிக வாடகையில் இயக்கப்படுவதாக விவசாயிகளிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன. சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1,800 வாடகைத் தொகையும், செயின் வகை அறுவடை இயந்திரங் களுக்கு மணிக்கு ரூ.2,600 வாடகை தொகையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை விட கூடுதலாக வாடகை வசூல் செய்யும் நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்து, விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் ஆகியோரிடம் நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளா் (வேளாண்மை) -8838565900 , வேளாண்ணை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா், சிவகங்கை - 9842408647, உதவி செயற்பொறியாளா், காரைக்குடி - 6379239272 -ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT