சிவகங்கை

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள கச்சங்கட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (28). இவா் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டுஆா்.எஸ். மங்கலம் விலக்குப் பகுதியில் வந்தபோது, எதிரே சாலைக் கிராமம் அருகேயுள்ள குயவா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சசிக்குமாா் (42) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சசிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாலைக் கிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முதலுதவி சிகிச்சையாகாது!

இலங்கைத் தமிழர் உரிமைகள் காக்க...

வாசிக்க வாங்கியவை!

புத்தகக் காட்சியில் இன்று

கிழக்கு பதிப்பகம்

SCROLL FOR NEXT