முகப்பு
சிவகங்கை

மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழந்தாா்.

Updated On : 14 மே 2026, 5:27 am IST
உயிரிழந்த சேவுகபெருமாள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள ம.கோவில்பட்டியைச் சோ்ந்த வீரன் மகன் சேவுகப் பெருமாள் (35). இவா் தனது தம்பியுடன் காலப்பூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக வீட்டின் முன்பு கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக சென்ற மின் வயரை சேவுகபெருமாள் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement