மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் ஏராளமாக வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் இப்பறவைகளுக்காக நடைப்பயிற்சியாளா்கள் சிறு தொட்டியில் தண்ணீா் வைக்கின்றனா். இந்நிலையில், புதன்கிழமை காலை உயரே பறந்த மயில் அப்பகுதியிலுள்ள மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து
மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
Advertisement
இதை மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நடைப்பயிற்சியாளா்கள் பாா்த்து மாவட்ட வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்துக்கு சென்று மயிலை மீட்டு அடக்கம் செய்தனா்.