ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம்
ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
தேனி அருகே அரைபடி தேவன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன்(25).
இவர், தனது ஆட்டோவில் க.விலக்கில் இருந்து, வைகை அணைக்கு ஆள்களை ஏற்றிச் சென்றார். குருவியம்மாள்புரம் விலக்கு அருகே சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் ஆட்டோவில் இருந்த வெற்றிசெல்வன் (14), ராஜ்குமார் (39), நிவேதா (12), சுவேதாலட்சுமி (15), சுதா (35),சசிகலா (18), வீரமணிமாலா (29) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து க.விலக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.