முகப்பு
தேனி

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்திற்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகள், கல்வி உதவித் தொகை பெற அக்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் எல்.ரமேஷ் தெரிவித்தார்.

Updated On : 21 அக்டோபர் 2013, 12:59 am IST
பகிர்:

தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்திற்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகள், கல்வி உதவித் தொகை பெற அக்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் எல்.ரமேஷ் தெரிவித்தார்.

     இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு, நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பாடப் புத்தகம் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

   தொழிற் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

    கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள தொழிலாளர்களின் குழந்தைகள், செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை -8  என்ற முகவரிக்கு சுய முகவரியுடன் கூடிய தபால் உறையுடன் விண்ணப்பித்து, விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் குறிப்பை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்.31ஆம் தேதிக்குள் அதே முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.