தேனி

ஒட்டன்சத்திரம் அருகே மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள எல்லைப்பட்டி பிரிவு அருகே முனீஸ்வரன் கோயில் பகுதியில் சில தினங்களுக்கு முன் மதுபானக் கடை திறக்கப்பட்டு,விற்பனை நடைபெற்று வந்தது. இந்த மதுபானக் கடை அருகே தனியார் பள்ளி மற்றும் அரசு தானியக் கிட்டங்கி உள்ளது. அதேபோல், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இச் சாலையில் மதுபானக் கடை வைத்துள்ளதால், மது அருந்திவிட்டு சாலைகளில் பாட்டில்களை உடைத்துச் சென்று விடுகின்றனர். இதனால், இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இந் நிலையில், நீலமலைக்கோட்டை, மூலச்சத்திரம், பலக்கனூத்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை மதுபானக் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு பகுதி வட்டாட்சியர் மிருளாளினி, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, ஆய்வாளர் கோட்டைச்சாமி, பலக்கனூத்து வருவாய் ஆய்வாளர் மல்லிகா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றவும், அது வரைக்கும் தாற்காலிகமாக இந்தக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT