தேனி

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN

ஆண்டிபட்டி வட்டாரத்தில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அம்மச்சியாபுரம், மரிக்குண்டு, தெப்பம்பட்டி, கனவாய்பட்டி, கொய்யாதோப்பு, சிதம்பர விலக்கு, மூலக்கடை ஆகிய கிராமங்களில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தடுப்பணை, பண்ணை குட்டை, கசிவுநீர் குட்டை, சூரிய ஒளி உலர்களம் ஆகியவற்றையும், விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள சோலார் சக்தி மின் மோட்டார் பம்பு உள்ளிட்ட விவசாய உபகரணங்களின் பயன்பாடுகளையும் ஆட்சியர் பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட வேளாண்மை செயற்பொறியாளர் ராஜேந்திரன், துணை இயக்குநர் மருதம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT