முகப்பு
தேனி

பெரியகுளத்தில் பிரார்த்தனை மைய புதிய கட்டட திறப்பு விழா

பெரியகுளம், தெற்கு அக்ரஹாரத்தில் பிராத்தனை மையத்தின் புதிய கட்டடத்தை ஸ்ரீஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் புதன்கிழமை திறந்துவைத்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பெரியகுளம், தெற்கு அக்ரஹாரத்தில் பிராத்தனை மையத்தின் புதிய கட்டடத்தை ஸ்ரீஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் புதன்கிழமை திறந்துவைத்தார்.
  அதன் பின் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜை மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் கம்பம் சாலையில் உள்ள தி.ராமானுஜம் திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு பிருந்தாவனமும், நந்தகுமாரனும் என்ற தலைப்பில் ஆன்மிக அருளுரை நடைபெற்றது.  மேலும் நவ. 12ஆ ம் தேதி வரை மாலை 6 மணிக்கு இங்கு ஆன்மிக அருளுரை நடைபெறுகிறது. நவம்பர் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு பிராத்தனை மையத்தில் (நாமத்துவாரில்) ஸ்ரீ ராதா திருக்கல்யாணம் நடக்கிறது என பிராத்தனை மையத்தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைடினிட்டி மற்றும் பெரியகுளம் பகுதி பக்தர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →