தேனி

வறட்சி நிவாரண நிதியில் முறைகேடு: அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கோரிக்கை

DIN

நிலக்கோட்டை வட்டத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வறட்சி நிவாரணத் தொகையில் முறைகேடு செய்ததாக கிராம உதவியாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை  வட்டம், நக்கலூத்து கிராமத்தில் கிராம உதவியாளராக(தலையாரி) இருந்தவர் பாண்டீஸ்வரன். அதேபோல் குல்லலக்குண்டு கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் விஜயராஜன். பாண்டீஸ்வரன் சேவுகம்பட்டியிலும், விஜயராஜன் ஒருதட்டு கிராமத்திலும் பணிபுரிந்தபோது,  விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக வந்த பணத்தில் முறைகேடு செய்துள்ளனர். 
 இதனால், நிவாரண உதவித்தொகை கிடைக்காத விவசாயிகள் பலர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக உதவியாளர்கள் பாண்டீஸ்வரன் மற்றும் விஜயராஜன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து எத்திலோடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,  வறட்சி நிவாரணம் முறைகேடு தொடர்பாக கிராம உதவியாளர்கள் மீது மட்டுமே கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். நிலக்கோட்டை வட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற மோசடி நடைபெற்றுள்ளது. வறட்சி நிவாரணம் கேட்டுச் செல்லும் விவசாயிகளிடம் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். இதனால் நிவாரணம் கிடைக்காத பல விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். உற்பத்தி பாதிப்பால் வாழ்வாதாரத்தை  இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண நிதியில் மோசடி செய்துள்ள உயர்  அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT