கம்பத்தில் அனுமதியின்றி ஊர்வலம்: இருதரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு
தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற இருதரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற இருதரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியில் கடந்த ஜூன் மாதம், இரு தரப்பினர் மோதிக் கொண்ட போது, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இருதரப்பைச் சேர்ந்த மாயன் மகன் லோகநாதன் (35), முகமதுசரீப் மகன் நிஜாம்தீன் (34) ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லோகநாதன், அவரது ஆதரவாளர்களுடன் கம்பம் தேவர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றார். இதே போல் நிஜாம்தீன் தனது ஆதரவாளர்களும் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக வந்தனர். கம்பம் நகரில் போலீஸ் தடைச் சட்டம் அமலில் இருப்பதால் லோகநாதன், நிஜாம்தீன் ஆகிய இரு தரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.