முகப்பு
தேனி

தேனியில் தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய அரசுத் துறை பணியாளர்களுக்கு பரிசு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கில், மாவட்டத்தில் தமிழில் சிறந்த

தேனி

தேனியில் தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய அரசுத் துறை பணியாளர்களுக்கு பரிசு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கில், மாவட்டத்தில் தமிழில் சிறந்த

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கில், மாவட்டத்தில் தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுத் துறை பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கிற்கு, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வெ.குமார், புலவர்.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆட்சியரின் சிறுசேமிப்புத் துறை நேர்முக உதவியாளர் அலுவலகம், ஆட்சி மொழி திட்ட செயல்பாட்டில் சிறந்து விளங்கிய அலுவலகத்திற்கான பரிசு மற்றும் கேட்டயம் வென்றது.
அலுவலக செயல்பாடுகளில் தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதியதற்காக பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்
அலுவலக உதவியாளர் சரவணன் முதலிடம், ஊரக வளர்ச்சி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் முருகதாஸ் 2-ஆம் இடம், பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை
உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் 3-ஆம் இடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பெற்ற பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →