தேனி

பாலியல் தொந்தரவு புகார்: தலைமை ஆசிரியர் தாற்காலிக பணி நீக்கம்

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், காமன்கல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதன்கிழமை,  பள்ளித் தலைமை ஆசிரியர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காமன்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன். இவர், அப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக கடந்த நவ.3-ஆம் தேதி பெற்றோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 
இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெரியகுளம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய மாவட்ட  தொடக்க கல்வி அலுவலர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனை தாற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT